கீழக்கரையில் மதுக்கடைகளை அகற்ற கோரி சமூக அமைப்புகள் முதல்வரை சந்திக்க முடிவு.

கீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபானக்கடைகளை அகற்ற கோரி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று விரைவில் முதல்வரை சந்திக்க இருப்பதாக கீழக்கரை சமூக அமைப்புகளான இஸ்லாமிய கல்வி சங்கம், மக்கள் நல பாதுகாப்புக் கழகம், மஜ்ம-உல்-ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை, கீழக்கரை நகர் நல இயக்கம், வடக்குத் தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை,சட்ட விழிப்புணர்வு இயக்கம், வீரகுல தமிழர் படை, மக்கள் டீம், முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் ஆகிய சமூக அமைப்புகள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளும் (கடை எண் : 6842,6843) பொதுமக்களுக்கு இடையூராகவும், சட்ட விதிமுறைகளுக்கு முரணாகவும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மதுபான கடைகள் அருகில் நகரின் பிரதான பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் குடியிருப்பு பகுதிகள் அருகில் இந்த மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு இந்த மதுபான கடைகளால் தொடந்து அச்சுறுத்தலும், சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றது.

இந்த கடையில் மது அருந்தும் மது பிரியர்கள் போதை அதிகமாகி இந்த பிரதான சாலையில் கிடப்பதால் இந்த சாலைகளில் செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் நிலை தொடர்ந்து ஏற்படுவதோடு, மது அருந்துபவர்கள் மதுவை அருந்தி கடைகளின் அருகில் மதுமயக்கத்தில் ஆடைகள் விலகி கிடப்பதால் இந்த பகுதியில் நடமாடும் பெண்கள், பள்ளி மாணவிகள் மனசஞ்சலத்தோடு இப்பாதையை கடந்து செல்கிறார்கள்.இந்த கடைகளை அகற்ற கோரி பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் பல கட்ட ஜனநாயக வழி போராட்டம் மற்றும் மனுக்கள் அளித்தும் இராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அவர்கள் பொதுமக்கள் நலனில் அக்கறை இன்றி இந்த கடைகளை அகற்ற மெத்தனம் காட்டி வருகின்றார்.

இந்த மதுபானக்கடைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை அறிந்தும் சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் போராட்டம் நடக்கும் ஒவ்வொரு முறையும் கடைகளை அகற்றுவதாக வாக்குறுதி அளித்தும் இதுவரை எந்த விதமான ஆக்க பூர்வமான நடவடிக்கையும் அதிகாரிகளால் எடுக்கப்படுப்பதில்லை.எனவே தமிழக முதல்வர் பொதுமக்கள் நலன் கருதி இந்த இரண்டு மதுபான கடைகளையும் அகற்ற தக்க நடவடிக்கை எடுக்கும் படி கீழக்கரை நகராட்சி பொதுமக்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு பொதுமக்கள் கையழுத்துடன் சந்திக்க இருப்பதாக கூறியுள்ளனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..