Home செய்திகள் பழனி KVB வங்கிக்கு TARATDAC மாற்றுத்திறனாளிகள் அமைப்பு கண்டனம்..

பழனி KVB வங்கிக்கு TARATDAC மாற்றுத்திறனாளிகள் அமைப்பு கண்டனம்..

by mohan

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் அனைத்து பொது இடங்களுக்கும் வந்து செல்ல வசதியாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்க வேண்டும் என 2012ம் ஆண்டே அரசானை வெளியிட்டும், மத்திய அரசு மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016ம் ஆண்டு சட்டம் நிறைவேற்றியும் இன்னும் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான அரசு கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித வசதியும் செய்து தரப்படவில்லை.அப்படியே சில இடங்களில் வசதி ஏற்படுத்தினாலும் அதை முழுமையாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வண்ணம் அமைக்காமல் நாங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி செய்து கொடுத்திருக்கிறோம் என்ற கடமைக்காக மட்டுமே சாய்வுதளம் அமைக்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தை எதிரில் உள்ள KVB வங்கியின் ATMல் முறையாக சாய்வுதளம் அமைக்காமல் பாதி சாய்வுதளம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.வீல்சேரில் வருகைதரும் மாற்றுத்திறனாளிகள் எப்படி இந்த பாதி சாய்வுதளத்தை பயன்படுத்த முடியும் என்பதை சிறிதும் யோசிக்காமல் கட்டப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி ATM வாயிலுக்கு நேராக சாய்வுதளம் அமைக்காமல் வலது பக்க ஓரமாக அமைக்கப்பட்டுள்ளது. வீல்சேரில் வருகைதரும் மாற்றுத்திறனாளிகள் எப்படி மேலே ஏறுவார்கள், எப்படி ATM வாயிலுக்கு வருவதற்கு திரும்புவார்கள் என்கிற சிறு சிந்தனை கூட இல்லாமல் நாங்களும் சாய்வுதளம் வைத்திருக்கிறோம் என கணக்கு காட்டுவதற்காக கட்டப்பட்டுள்ளதோ என்கிற ஐயப்பாடு எழுகிறது.

இதுபோன்ற சாய்வுதளங்கள் அமைப்பது என்பது ஒருபோதும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்கு பயன்படாது என்பதை அனைத்து வங்கிகளும் நினைவில் கொள்ள வேண்டும்.எனவே உடனடியாக பழனி KVB வங்கி நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளின் சாய்வுதளத்தை முறையாக அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வண்ணம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், பழனி நகர்க்குழு சார்பில் S. மாலதி – நகர தலைவர் P. தங்கவேல் – நகர செயலாளர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!