வருடங்கள் மாறினாலும் இடமாறுதல் இல்லாத வத்தலகுண்டு ஆர்டிஓ அலுவலக ஊழியர் .! ஊழியரின் பிடியில் சிக்கித் தவிக்கும் வத்தலகுண்டு வட்டார போக்குவரத்து அலுவலகம்.!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முதன்முதலில் 2003 ல் தொடங்கப்பட்ட போது இளநிலை உதவியாளராக சுந்தரம் என்பவரும் ஆய்வாளராக ஆனந்த் என்பவரும் பொறுப்பேற்றனர். தற்போது ஆனந்த் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.2003 ல் இருந்து தற்போது வரை சுமார் 16 ஆண்டுகளாக ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார் சுந்தரம்..இந்த போக்குவரத்து அலுவலகத்திற்கு லைசென்ஸ், பெயர் மாற்றம், ரெனிவல், புதிய வாகன பதிவு, என்று வரும் பொதுமக்கள் யாரையுமே அலுவலகத்திற்குள் அனுமதிப்பது கிடையாது ஆனால் புரோக்கர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி உண்டு இது “மாமூலாக” நடைபெற்று வருகிறது. இந்த அலுவலகம் முழுமைக்குமே சுந்தரம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது இவர் பேச்சை தான் அலுவலகத்தில் உள்ள அனைவருமே கேட்க வேண்டும் என்பது கட்டாய விதியாகும். அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கடும் வெயிலிலும் மழையிலும் நிற்க இடமில்லாமல் தவித்து வரும் வேளையில் சுந்தரத்தின் மனிதாபிமானம் இல்லாத செயலால் அவசரத்திற்கு ஒதுங்க கூட இடமில்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதில் லைசென்ஸ் மற்றும் தேவைகளுக்கு ஆர்டிஓ அலுவலகத்திற்கு வரும் பெண்களின் நிலையானது மிகவும் சங்கடமாக உள்ளது. அரசு அலுவலகம் என்றால் அனைவருக்கும் பொதுவானது தானே? பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கழிவறையும் பூட்டி வைத்துள்ளது இந்த அலுவலக இளநிலை உதவியாளரின் அதிகார துஷ்பிரயோகமாக உள்ளதாக சமூக ஆர்வலர் துரை என்பவர் குற்றம் சாட்டுகிறார். இதில் சுவாரஸ்யம் யாதெனில் அவருடன் பணியாற்றிய பலர் பதவி உயர்வில் சென்றுவிட்டனர். இவர் மட்டும் இங்கேயே எவ்வித பதவி உயர்வோ பணி மாறுதலோ இல்லாமல் ஒரே இடத்தில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். இதில் பொதுமக்களுக்கு இவர் அரசு அலுவலரா அல்லது செக்ஷன் ரைட்டரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஏனென்றால் எந்த ஒரு அரசு அலுவலரும் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே அலுவலகத்தில் பணியாற்ற முடியாது என்ற அரசு பணி விதிகள் இருந்த போதிலும் இவர் மட்டும் இங்கேயே இருப்பது பொது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த அலுவலகத்தில் பகல் நேரங்களில் சிசிடிவி கேமரா எப்போதுமே பயண் பாட்டில் இருக்காது அணைத்து வைக்கப்பட்டு விடும். வேலைகள் முடிந்து வீட்டுக்கு செல்லும் (இரவு) நேரங்களில் மட்டும் பயண்படுத்துவது வாடிக்கையாக வைத்துள்ளனர். காலையில் வந்ததும் மறுபடியும் சிசிடிவி கேமராவை அணைத்து வைத்து விடுவார்கள் இதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் பொதுமக்கள் குழம்பி வருகின்றனர். மேற்படி சுந்தரத்தை உடனடியாக பணியிட மாறுதல் செய்து அலுவலகத்தை மீட்டெடுக்கவும் பொதுமக்களின் நலன் காக்கவும்.திண்டுக்கல் வட்டார போக்குவரத்து தலைமை அலுவலகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal