Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்ட குடிமராமத்து திட்டப் பணிகள் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம்..அரசு முதன்மை செயலர் சந்திரமோகன் ஆய்வு…

இராமநாதபுரம் மாவட்ட குடிமராமத்து திட்டப் பணிகள் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம்..அரசு முதன்மை செயலர் சந்திரமோகன் ஆய்வு…

by mohan

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் முதல்வரின் குடிமராமத்து திட்ட புனரைமைப்பு, அரசின் இதர திட்ட வளர்ச்சி பணிகளின் செயல்பாடுகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடந்தது.இக்கூட்டத்தில்மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், அரசு முதன்மைச் செயலர், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு நிறுவனத் தலைவர் மேலாண்மை இயக்குநர் சந்திரமோகன்பேசியதாவது:தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறையின் கீழுள்ள 69 கண்மாய்களிலும், ரூ.21.8 கோடி மதிப்பில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழுள்ள 224 சிறுபாசன கண்மாய்கள், 988 ஊரணிகளிலும் விவசாயதாரர் மற்றும் கிராம பொதுமக்களின் பங்களிப்புடன் முன்னேற்றத்தில் உள்ளன.பருவமழை காலத்தை.கருத்தில் கொண்டு நீர்நிலை தமிழக அரசு புனரமைப்பு பணிகைளை துரிதமாக மேற்கொண்டு செப்டம்பர் 15-ம் தேதிக்குள் 100 சதவீதம் தரமாக நிறைவேற்றஉத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயதாரர் பாசன சங்க பிரதிநிதிகளை துரிதப்படுத்தி பணிகளை விரைவாக முடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புனரமைப்புப் பணிகளுக்கான செலவினத் தொகைையை தாமதமின்றி சம்பந்தப்பட்ட பாசன சங்க பிரதிநிதிகளுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் நலனுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்களான திருமண உதவித் தொகை மற்றும் விலையில்லா தங்கம் வழங்கும் திட்டம், மகப்பேறு உதவித்தொகை திட்டம், அம்மா இருசக்கர வாகன திட்டம், சூரிய ஒளி மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் அனைத்தும் எவ்வித தொய்வுமின்றி பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2018-19 ஆம் நிதியாண்டில் 1920 பயனாளிகளுக்கு ரூ.4.80 கோடி மதிப்பில் மானியத்தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கு1920 பயனாளிகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் வரை 935 பயனாளிகளுக்கு ரூ.2,33,75,000 மதிப்பில் மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டைப் போல இவ்வாண்டிலும் இத்திட்டத்தினை 100 சதவீதம் நிறைவேற்றிட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்ற திட்டங்களின் செயல்பாடுகளிலும் வீட்டுமனைப்பட்டா ஆணை வழங்குதல், பட்டா மாற்றம் செய்தல் போன்ற பணிகளிலும் எவ்வித குறைபாடுமின்றி செயல்படுத்தப்படுவதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பேசினார்.

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் புத்தேந்தல் கிராமத்திற்கு சென்று ஊரக வளர்ச்சித் துறையின் கீழுள்ள புத்தேந்தல் மடத்து ஊரணி, கீழக்கரை வட்டம் எக்ககுடி கிராமத்தில் பொதுப்பணித்துறையின் கீழுள்ள கண்மாய் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் புனரமைப்புப் பணிகளை அரசு முதன்மைச் செயலர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.இக்கூட்டத்தில்மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமலினி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவராணி, பொதுப்பணித்துறைசெயற்பொறியாளர் தவெங்கிடகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் கோபு ராமன், இணை இயக்குநர்கள் மரு.ஏ.சகாய ஸ்டீபன்ராஜ் (மருத்துவ நலப்பணிகள்), சொர்ண மாணிக்கம் (வேளாண்மை), கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முருகேசன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!