உச்சிப்புளி அருகே கார் மோதி தாய், மகன் பலி

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி எஸ்.எம்.காலனி சந்திர மோகன் மனைவி வனிதா, (37). இவர், அரியமான் கடற்கரை பூங்காவில் வியாபாரம் செய்து வந்தார். நேற்று30.08.19 மாலை வியாபாரம் முடித்த பின் வனிதாவை , அவரது மகன் ராஜேஷ் கண்ணன் இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வீடு திரும்பினார். பிரப்பன் வலசை அருகே உள்ள ஓட்டல் பகுதியில் சென்ற போது பின்னால் வந்த கார், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வனிதா, ராஜேஷ் கண்ணன் (16) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான ராஜேஷ் கண்ணன், இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இது குறித்து உச்சிப்புளி போலீஸ் எஸ்.ஐ., நந்தகுமார் வழக்கு பதிந்து, தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகிறார்.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal