நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் உயர்வு விவசாயி மகிழ்ச்சி

தமிழகத்தின் பூக்களின் ஜென்ட் என அழைக்கபடும் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகமான பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் விநாயக சதுர்த்தி மற்றும் வளர்பிறை முகூர்த்தத்தை முன்னிட்டு பூக்களின் விலை 1000- த்தை தாண்டியுள்ளது.நிலக்கோட்டையைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பூக்கள் விவசாயம் செய்யப்படும் விளைவிக்கப்படும் பூக்கள் நிலக்கோட்டை மார்க்கெட்டிலிருந்து சென்னை, கோவை, திருச்சி, போன்ற பெருநகரங்களுக்கும் கொச்சின், பெங்களூர், ஹைதராபாத் போன்ற வெளி மாநிலங்களுக்கும் சில வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சென்ற மாதங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போதும் இப்பகுதி விவசாயிகள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பாய்ச்சி பூக்களை விளைவித்தனர் இந்த நிலையில் இன்று நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் மல்லிகைப் பூ ஒரு கிலோரூ 1500 -க்கு மேலும் கனகாம்பரம் 1200, சாதிப்பு – 800, பிச்சிப் பூ – 800, ரோஸ் -300, சென்டுமல்லி – 100 மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான துளசி மற்றும் அரளிப்புகளும் அதிகமான விலை ஏற்றத்தில் உள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் இதே நிலை நீடிக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image