காணாமல் போன தாலி செயினை ஒப்படைத்தவர்களுக்கு போலிசார் பாராட்டு

மதுரை மாவட்டம் திருநகர் அருகில் உள்ள பாலசுப்பிரமணியன் நகரில் நான்கு நாட்களுக்கு(28.08.19) முன் ஒரு பெண்மணியின் தாலி செயினை பறித்துச்சென்ற திருடனை இருவரை பிடித்து இளங்கோ மற் றும் தாசன் என்ற நபர்களை பொதுமக்கள்  காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேற்கண்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட செயின் எங்கே என்று கேட்ட பொழுது வெளியில் தூக்கி எறிந்து விட்டதாகவும் என தகவல் தெரிவித்தான். இதனைத் தொடர்ந்து மறுநாள் அங்கே தேடிப் பார்த்தபோது கிடைக்கவில்லை. பின் இருவரையும் திருநகர் காவல்துறையினர் நீதிமன்ற நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .இந்த நிலையில்.இன்று (31.08.19)அந்த பெண்மணியின் திருமாங்கல்யம் எங்களது கோல்டன் செட்டில் கிளப் வேலியில் தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து அதன் உரிமையாளர் இன்று 31.08.19 திருநகர் காவல்துறை ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர் .இதனைத்தொடர்ந்து தாலி செயினை ஒப்படைத்த கோல்டன்செட்டில் கிளப் -ன் உரிமையாளர்  முஜிபுர் ரகுமான் மற்றும் உறுப்பினர்கள் செந்தில் வேல்  சங்கையா வேல் தேவர் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் இணை ஆய்வாளர்கள் மற்றும் சக காவலர்கள் பாராட்டு தெரிவித்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image