Home செய்திகள் மெத்தனப் போக்கில் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை துறை.. உயிர்பலி வாங்கும் முன் சாலையை சரி செய்யுமா ?

மெத்தனப் போக்கில் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை துறை.. உயிர்பலி வாங்கும் முன் சாலையை சரி செய்யுமா ?

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பிரதான சாலையில் பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் இணைக்கும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சாலைகள் சுமார் இரண்டு இன்ச் அளவிற்கு பெரிய பெரிய கற்கள் பெயர்ந்து இருசக்கர வாகனங்களில் சரளைக்கல் களில் சிக்கி விபத்து ஏற்படுகிறது.. இதில் பலருக்கு படுகாயம் ஏற்படுகிறது .இது தேசிய நெடுஞ்சாலை என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவரும் பகுதியாக உள்ளது. இரவு நேரங்களில் இந்த கற்களை கவனிக்காத இருசக்கர வாகன ஓட்டிகள் வேகமாக வரும்பொழுது விழுந்து படுகாயம் அடைகிறார்கள் .வாகன ஓட்டியின் பாஸ்கர் அவர்கள் கூறும் பொழுது இங்கு சாலையில் மிகப்பெரிய கல் உள்ளது இதனால் இருசக்கர வாகனங்களில் வரும்பொழுது வாகனம் நிலை தடுமாறி கீழே விழும் சூழ்நிலை ஏற்படுகிறது இதனால் இதில் நானே இரண்டு முறை கீழே விழுந்து உள்ளேன் என கூறினார் இது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது பின்னால் வரும் வாகனம் சற்று வேகமாக வந்தால் அவர்கள் மீது ஏற கூடிய சூழ்நிலையும் உயிர் பலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது இதனை கருத்தில் கொண்டு உடனடியாக அந்த சாலையை சரி செய்ய வேண்டும் என அவர் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!