போளூர் ஊராட்சி ஒன்றிய மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்

போளூர் ஊராட்சி ஒன்றிய மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. உதவி திட்ட அலுவலர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். சிறப்பு பயிற்றுனர் கலா வெங்கடசுப்பிரமணியன் வரவேற்றார்.இதில் எலும்பு முறிவு மருத்துவர் நடராசன், காது மூக்கு தொண்டை மருத்துவர் பழனிவேல்ராஜன், கண்மருத்துவர் சரண்யா, குழந்தைகள் நலமருத்துவர் ரேவதி, மனநல மருத்துவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் மாற்றுத்திறன் குழந்தைகளை ஆய்வு செய்து அவர்கள் ஊனத்தின் தன்மைக்கேற்ப அடையாள அட்டைக்கு தேர்வு செய்தனர்.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், மாவட்ட கல்வி அலுவலர் கருணாகரன் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.இதில் புள்ளியியல் அலுவலர் ராமமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர் மோகன், அரசினர் பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி, ஆசிரிய பயிற்றுநர்கள் சுகந்தி, விஜயலட்சுமி, ரவிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..