இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பெயர் மாறியது: ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் என்ற பெயர் இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தகவல். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வேலைவாய்ப்பு பிரிவு மறுசீரமைக்கப்பட்டுஅரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகம் என்ற பெயர் இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக மாநில தொழில்நெறிவழிகாட்டல் மையம் சென்னையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அன்றாட பணிகளுடன், திங்கள்தோறும் திறன் பயிற்சிக்கான ஆலோசனை முகாம், செவ்வாய்தோறும் பள்ளி கல்லூரிகளில் அரசு வேலைவாய்ப்புமற்றும் போட்டித்தேர்வு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்துதல்,புதன்கிழமைகளில் போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்துதல்,வியாழக்கிழமைகளில் தனிநபர் , குழு வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்,வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துதல் போன்ற பணிகளை இவ்வழிகாட்டுதல் மையம் செய்து வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள படித்தவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்மையத்தினை அணுகி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.