ராமேஸ்வரம் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய இலங்கை படகு

ராமேஸ்வரம் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய இலங்கை படகை மீட்டு மெரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.
ராமேஸ்வரம் தென் கடல் தீவு பகுதியான மன்னார் வளைகுடா மணலி தீவு மணல் திட்டில் படகு ஒன்று ஒதுங்கி இருப்பதாக மண்டபம் மெரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி அங்கு சென்ற போலீசார் 4624 பிடிஎம் என்ற எண்ணில் தயாரிக்கும் இடம் சின்ன குடியிருப்பு, கல் பெட்டி என எழுதிய இலங்கை படகை மீட்டனர். இலங்கையில் இருந்து தப்பித்து படகை விட்டுச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.