நீளம் தாண்டுதல் போட்டியில் ஒன்றிய அளவில் முதலிடம் பெற்று நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவர் சாதனை

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நாடார் உயர் நிலைப் பள்ளி மைதானத்தில் நிலக்கோட்டை ஒன்றிய அளவிலான நீளம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஆதிராஜன் முதலிடம் பெற்றார். முதலிடம் பெற்ற மாணவர் ஆதிராஜனையும் பயிற்சி அளித்த உடற் கல்வி ஆசிரியர் சுதர்சனையும் பள்ளியின் தாளாளர் சுதாகரன், தலைமை ஆசிரியர் விஜயகுமார், மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் வெகுவாக பாராட்டினர்.