எவரெஸ்ட் சிகரத்தில் இந்திய தேசிய கொடியை ஏற்றி சாதனை படைத்த தமிழக பெண்மணி நிவேதா

சென்னையை சேர்ந்த மென் பொறியாளரான நிவேதா ராஜமாணிக்கம் ஜரோப்பிய கண்டத்திலேயே மிக உயரமான எல்பரஸ் ( Mt Elbrus ) மலை சிகரத்தில் இன்று இந்திய தேசிய கொடியை ஏற்றி சாதனை படைத்தார்.சென்னையை சேர்ந்த நிவேதா இராஜமாணிக்கம் புனே மென்பொருள் நிறுவனத்தில் இன்ஜினியராக பணி செய்கிறார். மலை ஏற்றத்தில் விருப்பம் கொண்ட நிவேதா மராட்டிய அரசு நடத்திய மலை ஏற்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்.

இமய மலை பகுதிகளிலும் புனேவிலும் பல்வேறு மலை பகுதிகளில் பயிற்சி எடுத்த நிவேதா எவரெஸ்ட் சிகரத்தில் 17600 அடி வரை ஏறியிருக்கிறார்.லடாக் பகுதியிலுள்ள இந்தியாவிலேயே நீளமான மலை பாதை கொண்ட ஸ்டோக் கங்ரி மலை சிகரத்திலும் ஏறியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.மிக உயரமான எல்பரஸ் மலை சிகரத்தில் ஏறி இந்திய தேசியக் கொடியை ஏற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அந்த பெண் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்