துப்பாக்கி குற்றவாளிகளை கண்ணிமைக்கும் நேரத்தில் கைது செய்த மதுரை மாவட்ட போலீசார்.

சென்னையை சார்ந்த தனசேகரன், கார்த்திகேயன், கிருஷ்ணன் ,மதுரையை சேர்ந்த ரகுபதி, ராஜா, பால்பாண்டி, சசிகுமார் ,ஆகியோர் ஒரு வழக்கு தொடர்பாக நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு ,நேற்று 29.08.19 பகல் 2 மணிக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் சுங்கச்சாவடி கடக்கும்போது, சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்க பிரச்சனை ஏற்பட்டு, சசிகுமார் என்ற நபர் துப்பாக்கியை காட்டி மிரட்டி மூன்று முறை வானத்தை நோக்கிச் சுட்டுள்ளார். அப்பொழுது அங்கு பணியில் இருந்த SSI  சுரேஷ் அவரை பிடிக்க முயன்று உள்ளார் .அவர்கள் தப்பிக்கவே இதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

நான்கு பக்கமும் சுற்றி சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்த நபர்கள் “தப்பிக்க திறம்பட செயல்பட நினைத்து, கொண்டு வந்த காரை விட்டு விட்டு ஆட்டோவில் தப்பிக்க முயன்றனர்.அப்பொழுது வாகன சோதனையில் ஈடுபட்ட வாலாந்தூர் போலீசார், ஆட்டோவில் வந்த நபர்களை அலேக்காக கைது செய்தனர் . விரைந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . மணிவண்ணன், Iதுப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை விரைவாக கைது செய்த போலீசாரை வெகுவாக பாராட்டினர்.மேலும் அவர்களிடமிருந்து 4 துப்பாக்கிகள் மற்றும் 18 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன . அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் குற்றவாளிகளை 1.1/2 மணி நேரத்தில் திறம்பட செயல்பட்டு கைது செய்த போலிசாருக்கு, *தென் மண்டல காவல்துறைத் தலைவர் சண்முக ராஜேஸ்வரன்நேரில் சென்று பரிசு வழங்கினார்.DIG  ஆனி விஜயா, IPS, மதுரைமாவட்ட SP மணிவண்ணன்,IPS ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி வி காளமேகம்