ஓவிய பயிற்சி முகாம்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஓவிய பயிற்சி முகாம் நடைபெற்றது.ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர்  .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேசிய விருது பெற்ற அழகப்பா பல்கலைக்கழக நுண்கலை துறை பேராசிரியர் தேவராஜ் மாணவர்களுக்கு ஓவியம் வரைவதற்கான அடிப்படை திறன்கள் குறித்து பயிற்சி அளித்தார்.

ஓவியர் தேவராஜ் மாணவர் ஜோயலை அமரவைத்து மூன்று நிமிடங்களுக்குள் அவரை போன்று படம் வரைந்து காண்பித்து அசத்தினார். பயிற்சியின் நிறைவாக மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது.போட்டியில் சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்கள் ராகேஷ்,முகல்யா,நதியா,முத்தய்யன் ,அய்யப்பன்,ஓவியா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்