இராமநாதபுரத்தில் புதிய உதயம் “நேசனல் ஆட்டோ ஸ்பேர்ஸ்”…

இன்றைய கால சூழலில் மிகவும் அத்தியாவசியமான விசயங்களின் ஒன்று வாகனம்.  வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது போல் வீட்டுக்கு ஒரு வாகனம் என்ற நிலை மாறியுள்ளது. இரண்டு அல்லது நான்கு சக்கரம் வாகனம் இல்லாத வீடுகளே இல்லாத நிலைதான் உள்ளது.

அதே போல் புதிய வாகனம் வாங்கியதோடு அல்லாமல் தரமான உதிரி பாகங்கள் வைத்து பராமரிப்பது   என்பது மிகவும் முக்கியமான விசயமாகும். முக்கியம் என்பதை விட மிகவும் அனுபவமும் நிறைந்த, தொழில் நுட்பம் அறிந்தவர்களை மூலம் பொருட்கள் வாங்குவது மிகவும் அவசியம்.

இந்த முக்கியத்துவத்தை அறிந்து அமீரகத்தில் இத்துறையில் பல வருடங்கள் அனுபவம் உடைய கீழக்கரையை சார்ந்த பழைய குத்பா பள்ளியை சார்ந்த அப்துல் நசீர் என்பவரால் இராமநாதபுரம் ரயில்வே ஃபீடர் சாலையில் “நேசனல் ஆட்டோ ஸ்பேர்ஸ்” (National Auto Spares) எனும் நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. இந்நிறுவனம் மூலம் அனைத்து வகையான முன்னனி கார் நிறுவனங்களின் உதிரி பாகங்கள் விற்க உள்ளனர்.

இந்நிறுவனத்தின் வியாபாரம் செழிக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..