Home செய்திகள்உலக செய்திகள் ஹாஜிகளுக்கு பணிவிடை செய்த தன்னார்வ தொண்டர்களுக்கு பாராட்டு விழா தம்மாமில் நடைபெற்றது!

ஹாஜிகளுக்கு பணிவிடை செய்த தன்னார்வ தொண்டர்களுக்கு பாராட்டு விழா தம்மாமில் நடைபெற்றது!

by mohan

வருடா, வருடம் மக்காவுக்கு புனித ஹஜ் கடமைக்காக வருகின்ற பல்வேறு நாட்டு ஹாஜிகளுக்கும் தேவையான பணிவிடைகளை செய்வதற்காக இந்திய ஃபிரட்டர்னிடி ஃபோரம் சார்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ கலந்து கொள்வது வழக்கம்..இவ்வருடம் (2019) சவூதிஅரேபியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 1300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்; தம்மாம் கிழக்கு மாகாணத்தின் சார்பில் 200 பேர் மக்கா சென்றனர்; அதில் தமிழ் பிரிவின் சார்பில் 35 பேர் கலந்து கொண்டனர்தங்களுக்கு கிடைத்த பெருநாள் விடுமுறையை ஹாஜிகளுக்கு பணிவிடை செய்யும் உயர்ந்த சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களுக்கு தம்மாமில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்திய ஃபிரட்டர்னிடி ஃபோரம் அல்கோபார் கிளை தலைவர் ரூஹுல்ஹக் தலைமையில் நடைபெற்ற விழாவில் பஷீர்பாய் இறைமறை ஓதி துவக்கி வைத்தார்; நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஷேக் பைசல் அனைவரையும் வரவேற்று பேசினார்..நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ரூஹுல்ஹக் தனது அறிமுக உரையில் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தங்களின் சொந்த செலவில் மக்கா சென்று ஹாஜிகளுக்கு பணிவிடை செய்தவர்களின் பொதுசேவை மகத்தானது என்றும் அவர்களுக்கு இறைவனின் அருள் கிடைக்கட்டும் என்றும் பிரார்த்தித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அல்ஜுபைல் சஹாரா குழுமத்தின் முதன்மை அதிகாரியின் அலுவலக மேலாளர் ஜெய்னுதீன் தனது வாழ்த்துரையில்:- லட்சக்கணக்கான ஹாஜிகள் கூடுமிடத்தில் மொழி பாகுபாடற்ற முறையில் அனைத்து நாட்டு ஹாஜிகளுக்கும் அடிப்படை உதவிகளை செய்து கொடுத்துள்ளவர்களின் பணி வரும் காலங்களிலும் தொடரவேண்டுமென தாம் விரும்புவதாக கூறினார்..இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தேசிய துணைத்தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி சிறப்புரையாற்றினார்; அவர் தனது உரையின் போது, சவூதிஅரேபியாவில் தொழிலாளர்களுக்கான பொதுவிடுமுறை என்பது வருடத்தில் ஹஜ் பெருநாள் மற்றும் நோன்பு பெருநாள் விடுமுறை மட்டுமே.

ஹஜ் பெருநாளைக்கு விடப்பட்ட விடுமுறை நாட்களை புனிதமான மக்காவில் நின்று கொண்டு ஹாஜிகளுக்கு தேவையான குடிநீர் வழங்குதல் மற்றும் முதியவர்களை தள்ளு வண்டியில் வைத்து அவர்களது இருப்பிடங்களுக்கு அழைத்து செல்வது, வயதான ஹாஜிகளை தூக்கி சுமப்பது போன்ற பல்வேறு சேவைகளையும் இறையருள் விரும்பி செய்திருப்பதை பாராட்டினார்..முன்னதாக ஹாஜிகளுக்கு சேவை செய்தோர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்; பெரும்பாலும் ஹாஜிகள் தங்களின் இருப்பிடங்கள் தெரியாமல் பல கிலோ மீட்டர் தூரமெல்லாம் அலைந்து திரிந்து கடைசியாக எங்களின் உதவியை நாடும் போது அவர்களின் இருப்பிடங்களை கண்டுபிடித்து சேர்த்து விடுவோம் என்றனர்.

ஹாஜிகள் தங்களின் அடையாள அட்டையை எப்போதும் கையில் வைத்திருப்பது மிகவும் அவசியம் என்பதை அனைத்து நாட்டு ஹஜ் தூதரகங்கள் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர்..ஹாஜிகளின் தேவையறிந்து அழகிய முறையில் அர்ப்பணிப்பு உணர்வோடு சேவையாற்றிய நமது தன்னார்வ தொண்டு ஊழியர்களை பல்வேறு நாட்டு ஹாஜிகளும் பாராட்டி மகிழ்வோடு பிரார்த்தனை செய்தது நெகிழ்ச்சியாக இருந்ததென்று அனைவரும் தெரிவித்தனர்.

ஷேக் பைசல் நன்றி கூறினார்; நிகழ்ச்சியில் அல்கோபார்,தம்மாம்,அல்ஜுபைல் போன்ற பகுதிகளில் இருந்து தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்: கீழை அரூஸி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!