நகை கடை சுவற்றில் ஓட்டை போட்டு கொள்ளை..

திருவண்ணாமலை அருகே உள்ள பெரியகோலாப்பாடி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் நகை அடகுக்கடை வைத்து உள்ளார்.  இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.நேற்று அதிகாலை கடையில் பின் பக்கத்தின் சுவரில் பெரியளவில் ஓட்டை போடப்பட்டு உள்ளதாக அக்கம்பக்கத்தினர் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது கடையின் சுவரில் மர்ம நபர்கள் ஓட்டை போட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து அவர் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை சம்பவம் நடைபெற்ற கடைக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி நேரில் வந்து விசாரணை நடத்தினார்.இந்த கொள்ளை சம்பவத்தின் போது கடையில் நகைகள் வைக்கப்பட்டு இருந்த இரும்பு லாக்கரை மர்ம நபர்கள் உடைக்க முயன்று உள்ளனர். ஆனால் அவர்களால் லாக்கரை உடைக்க முடியவில்லை. இதனால் அந்த லாக்கரில் இருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் தப்பியது. மேலும் கடையில் வைத்திருந்த ரூ.2½ லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நகை அடகுக்கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image