சுங்கச் சாவடிகளில் தமிழ் தொியாத பணியாளா்களால் வாகனஓட்டிகள் அவதி

மதுரை – ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பாச்சேத்தி வழியில் இருக்கக்கூடிய சுங்கச்சாவடியில் வடமாநிலத்தவர்கள் பணியில் உள்ளனர். தமிழர்களுக்கு அவர்களிடம்         விவரங்களை கேட்டு பதில் கூற அவர்களுக்கு மொழி தெரியவில்லை. தற்பொழுது எல்லா வணிக வளாகங்களிலும் உணவகங்களிலும் வடமாநிலத்தவர்கள் பணியில் அமர்த்தி உள்ளார்கள். அவர்களுடைய மொழி தெரிந்தால் தான் நாம் நம்முடைய தமிழ்நாட்டிலேயே நமக்கு தேவையான பொருட்களை வாங்க முடியும் என்கின்ற காலச்சூழலில் இப்போது ஏற்பட்டுள்ளது .அப்படி வருந்தத்தக்க சூழல் இருக்கக் கூடிய நிலையில் இப்போது சுங்கச் சாவடிகளிலும் வடமாநிலத்தவர்கள் அதிகமாக பணியில் அமர்த்தி இருப்பதன் மூலம் அவ்வழியே செல்லும் தமிழர்கள் தமிழ் மொழியில் கட்டண விபரங்களை கேட்டு அறிவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது .படித்தவர்களால் தமிழக வாகன ஓட்டிகளுடைய கேள்விகளுக்கு அந்த கேள்விகளை உடனடியாக புரிந்து கொண்டு உடனே பதில் அளிக்க இயலவில்லை.இதனால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெருக்கடியும் கூட ஏற்படுகிறது. ஓரிடத்தில் சுங்கவரி கட்டுவதற்கு நம் கேள்விகளுக்கு அந்த வட மாநிலத்தவர் அதை புரிந்துகொண்டு பதிலளிப்பதற்கு கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வரை நேரம் எடுத்துக் கொள்கிறார்கள் .இதனால் செல்ல வேண்டிய இடங்களுக்கு நேரத்திற்கு செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இயன்றவரையில் தமிழக பகுதிகளில் குறிப்பாக சுங்கச்சாவடிகளில் தமிழ் தெரிந்த நபர்களை தமிழர்களை பணிக்கு அமர்த்தினால் நன்றாக இருக்கும் என்பது சுங்கச்சாவடிகளை கடக்கும் ஒவ்வொரு தமிழரின் விண்ணப்பமாக உள்ளது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image