மதுரையில் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சீருடையுடன் தூக்கிலிட்டு தற்கொலை – பணிச்சுமை காரணமா என போலிசார் விசாரணை.

மதுரை அலங்காநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவருகிறார்.இவர் மனைவி இரு பிள்ளைகளுடன் மதுரை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் வசித்துவருகிறார். ஞாயிற்றுக்கிழமை 25.08.19 உறவினர் இல்ல விழாவிற்கு அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சென்றிருந்த நிலையில் மதியம் பணிக்கு செல்வதற்காக சீருடை அணிந்தநிலையில் திடிரென வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதனையடுத்து அங்குள்ள காவலர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.உதவி ஆய்வாளர் தற்கொலை செய்துகொண்டது அங்கு வசிக்கும் காவல்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. பணியில் சிறப்பாக செயல்பட்டதோடு, குடும்பத்திலும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த உதவி ஆய்வாளர் நாகராஜன் உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.உதவி ஆய்வாளர் நாகராஜ் பணிச்சுமையால் தற்கொலை செய்தாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமாக என்பது தல்லாக் குளம் காவல் துறையினர் விசாரணை முடிவில் தெரியவரும்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..