இராமநாதபுரத்தில் போலீஸ் வேலை எழுத்து தேர்வு 1,386 பேர் ஆப்சென்ட்

2019-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்) சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான எழுத்து தேர்வு ராமநாதபுரத்தில் நேற்று நடந்தது. இதில் 1,036 பெண்கள், 7,516 ஆண்கள் என 8,552 விண்ணப்பித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்திலகீழக்கரைமுகமது சதக் பொறியியல் கல்லூரி,முகம்மது சதக் பாலிடெக்னிக் ,செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,தாசீம்பீவி அப்துல்காதர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை கல்லூரி,செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல்
கல்லூரி, செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களில்தேர்வறை ஒதுக்கப்பட்டது. இந்த 7 மையங்களில் 229 பெண்கள், 1,157 ஆண்கள் என 1,386 பேர் தேர்வில் பங்கேற்வில்லை. தேர்வு மையங்களை ராமநாதபுரம் சரக காவல் துறை துணை தலைவர் ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் பார்வையிட்டனர்.

.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image