உச்சிப்புளி அருகே வீட்டில் கள்ளத்துப்பாக்கிய பதுக்கிய பெண் கைது

இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன் வலயைச் சேர்ந்த டிரைவர் பூமிநாதன். வாகன திருட்டு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய இவர் புழல் சிறையில் உள்ளார். இவரது மனைவி வள்ளி. வீட்டில் தையல் தொழில் செய்து வருகிறார். இலங்கைக்கு கடத்துவதற்காக வள்ளி வீட்டில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்துள்ளதாக அக்கம், பக்கத்தினரிடம் பரவலாக பேச்சு எழுந்தது. இது குறித்து பிரப்பன் வலசை கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி வள்ளி வீட்டை உச்சிப்புளி போலீசார் நேற்று (24.8.19) மாலை சோதனை செய்தனர். வீட்டில் பதுக்கிய கள்ளத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். வள்ளி மீது மிரட்டல், சட்ட விரோதமாக ஆயுதம் பதுக்கல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வள்ளி மீது உச்சிப்புளி போலீஸ் எஸ்.ஐ., வழக்கு பதிந்தார். இன்ஸ்பெக்டர் முத்து பிரேம் சந்த் விசாரிக்கிறார்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..