நிலக்கோட்டை அருகே மழை வேண்டி ராமராஜபுரத்தில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியம் ராமராஜபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மழை வேண்டி கிராம மக்கள் மற்றும் யாதவ கிராம சபை சார்பாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.     இவ்விழாவில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி சேகர் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர்கள் தலைமைதாங்கி கொடியசைத்து பந்தயத்தை துவங்கி வைத்தனர் . நிலக்கோட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் யாகப்பன், திமுக ஒன்றிய செயலாளர் மாயாண்டி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்..          இந்த பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் 10 மாடுகள் கலந்து கொண்டதில் மதுரை கல்லணையை சேர்ந்த விஸ்வா ராஜேந்திரன் முதல் பரிசையும், இரண்டாவது பரிசை கூடலூர் சிவா மாடு, மூன்றாவது மாடு மாத்தூர் பேச்சி என்பவர் மாடும பரிசை தட்டி சென்றன,          இதேபோன்று நடு மாடு பிரிவில் 20 மாடுகள் கலந்து கொண்டதில் வருசநாடு நடனம் மகேந்திரன் மாடு முதல் பரிசையும்,, மதுரை குருவித்துறை சந்தோஷ் என்பவர் மாடு இரண்டாவது பரிசையும்,  கம்பம் அழகு பிள்ளை என்பவர் மாடு மூன்றாவது பரிசையும், மதுரை, கல்லணை விஷ்வா என்பவர் மாடு ஆறுதல் பரிசையும் தட்டிச் சென்றது.
        இந்த போட்டியில் கலந்து கொண்ட மாடுகளில் திரும்பி வந்தபோது பொதுமக்கள் வரிசையாக நின்று இருந்த இடங்களில் புகுந்தது. மக்கள் விலகிச் சென்றதால் பள்ளத்துக்குள் விழுந்தது.. இதில்  மாட்டிற்கும், மாடு ஓட்டி வந்த வரைக்கும் எந்தவிதமான காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள். இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.    இவரைத் தொடர்ந்து  ராமராஜ புரத்தில் உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பு வெற்றி பெற்ற மாடுகளுக்கும், வெற்றி பெற்ற மாடு உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கமலக்கண்ணன், கிருஷ்ணமூர்த்தி, கமலாவதி, அதிமுக ஒன்றிய துணை செயலாளர் நல்லதம்பி, திமுக ராஜாங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..