கீழக்கரை மக்களின் தேவையை கருதி 24 மணிநேரமும் செயல் படும் மருத்துவமனை விரைவில் திறப்பு.

தற்போது கீழக்கரையில் மருத்துவர்கள், மருத்துவமனைகள் இருந்தாலும் 24 மணிநேரமும் செயல்பட்டும் மருத்துவமனை இல்லாதது வளர்ச்சி அடைந்த கீழக்கரையில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது.தற்போது அரசு மருத்துவமனை,தனியார் மருத்துவமனை இருந்தாலும் அவசர காலங்களில் மற்றும் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லததால் இந்த பகுதி மக்கள் தொடந்து மருத்துவம் பார்க்க முடியாமல் அவதிப்பட்டுவதுடன்,கீழக்கரையில் இருந்து 18 கிலோமீட்டர் தூரம் உள்ள இராமநாதபுரம் மருத்துவமனைகளுக்கு செல்கிறார்கள்.இந்த குறைகயை அறிந்த பிரபல கீழக்கரை மருத்துவர் K.நசீரா பர்வீன் புதிய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வந்த அன்பு கிளினிகில் அரசு மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் தனது ஆயிஷா கிளினிக்கை இடம் மாற்றம் செய்து 24 மணிநேரமும் செயல்படும் மருத்துவமனையாக மாற்றம் செய்து விரைவில் செயல் படுத்த இருக்கின்றார்.

இது சம்பந்தமாக டாக்டர் K.நசீரா பர்வீன் நமது கீழை நியூஸ் இணைய தள பக்கத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது தற்போது கீழக்கரையில் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவனை இல்லாதது கீழக்கரை மக்களுக்கு பெரும்குறையாக இருந்து வருகின்றது.இதனால் நோயாளிகள் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் தீவிர சிகிச்சை இன்றி அவதிப்படுகிறார்கள்.தற்போது என் மகள் K.ஆயிஷா பர்வீன் மருத்துவராக இருக்கின்றார். தற்போது பெண்களுக்கான சிறப்பு மருததுவமும் தொடர்ந்து படித்து வருகின்றார்.கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் நலன் கருதி நாங்கள் திறக்க இருக்கும் மருத்துவமனையை 24 மணி நேரம் செயல்படும் மருத்துவமனையாக செயல்படுத்த இருக்கின்றோம்.எங்கள் மருத்தவமனையில் அவசர சிகிச்சை பிரிவு,பிரசவம் பார்த்தல்,அறுவை சிகிச்சை அறை,எக்ஸ்ரே மற்றும் ரத்த பரிசோதனை நிலையம் போன்ற வசதிகளோடு இந்த மருத்துவமனை செயல்பட இருக்கிறது என்றார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..