வடமதுரை அருகே தனியார்மில் வேன் ஓட்டுநரை மர்மநபர்கள் கொடிய ஆயுதங்களால் தாக்கி பணம் மற்றும் செல்போன் பறிப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே கண்ணூத் ஊரைச்சேர்ந்த கிருஷ்ணா(26) தனியார் மில் வேன் டிரைவராக வேலை செய்து வரும் இவரிடம் SBM பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கத்தியை காட்டி மிரட்டி கடுமையாக தாக்கியதோடு செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதேபோல் சம்பவம் அதே பகுதியில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு நடந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவத்தில் மூன்று நபர்களை வடமதுரை காவல்துறையினர் கண்டறிந்து செல்போன் மற்றும் பணத்தைப் பெற்று பாதிக்கப்பட்ட நபருக்கு கொடுத்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களால் இரவு நேரங்களில் இந்த பகுதியில் நடந்து செல்வதற்கும் இருசக்கர வாகனத்தில் செல்வதற்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆகவே, காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..