பெருமாள் நகரில் கிழக்கு சந்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையின் நடுவே வெளியேறி துர்நாற்றம்..

திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட பெருமாள் நகரில் மாரியம்மன் கோவில் கிழக்கு சந்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையின் நடுவே வெளியேறி துர்நாற்றத்தால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.கழிவு நீர் வெளியேறுவதால் துர்நாற்றம் ஏற்படுவதால் அவர்களுக்கு ஏற்படும் அவதிகள் குறித்து நகராட்சிக்கு பலமுறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரி வள்ளியிடம் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருகிறார்.இதுகுறித்து நகராட்சி கமிஷனர் அவர்களிடமும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் மர்ம காய்ச்சல் மற்றும் தொண்டை அடைப்பான் நோய் வந்து இரண்டு நபர்கள் தற்போதுதான் மரணமடைந்த சம்பவம் அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியும்.இருப்பினும் இது போன்ற நிகழ்வுகளை கண்டு கொள்ளாமல் இருப்பது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு மிகுந்த வேதனையாக உள்ளது.பல்வேறு இடங்களில் சாலையின் நடுவே இதுபோன்று கழிவுகள் வெளியேறி வருகின்ற காரணத்தால் துர்நாற்றம் வீசுகிறது.

பாதாள சாக்கடையின் வழியே செல்ல வேண்டிய கழிவு நீரானது வெளிப்புறக் கால்வாயில் திருப்பப்பட்டு இருப்பது துர்நாற்றம் வீசுவது அதிகரிப்பதற்கு மேலும் ஒரு காரணமாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.இதனை குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தாங்கமுடியாமல் குழந்தைகளையும் குடும்பத்தையும் வைத்துக்கொண்டு தவித்து வருகின்றனர்.இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் இந்த நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு தனியார் மருத்துவமனை நாட வேண்டி உள்ளதாகவும் தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் இதற்கு எங்களால் அந்த அளவுக்கு செலவு செய்யமுடியாத நிலைமை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.மாவட்ட ஆட்சித்தலைவர் இது சம்பந்தமாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image