TARATDAC சார்பில் நடைபெற்ற ஏழாண்டு கால மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி…

திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த வசதியாக வெஸ்டர்ன் கழிப்பறை வசதி செய்து தரப்படாமல் இருந்தது. ஏழு ஆண்டுகளாக பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் முறையிட்டும் பலனில்லாத காரணத்தால் கடந்த 24.07.19 அன்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தை ஒட்டி பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட வருவாய் அலுவலர் 45 நாட்களுக்குள் மாற்றுத்திறனாளிகளுக்கான வெஸ்டர்ன் கழிப்பறை வசதியை ஏற்ப்படுத்தி தருவதாக உத்திரவாதம் அளித்தார்.

அதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் வெஸ்டர்ன் கழிப்பறை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் சில தினங்களில் மாற்றுத்திறனாளிகளின் உபயோகத்திற்காக கழிப்பறை திறக்கப்பட உள்ளது.கழிப்பறை வேலைகள் மட்டுமே நிறைவடைந்துள்ள சூழ்நிலையில் இன்று வரை கழிவறைக்கு பயன்படுத்தும் தண்ணீருக்கான ஏற்ப்பாட்டை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. எனவே, உடனடியாக கழிப்பறையை பயன்படுத்துவதற்கான தண்ணீரையும் ஏற்பாடு செய்து மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமாறு TARATDAC-யுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TARATDAC-யின் கோரிக்கைக்கு செவிசாய்த்து நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில்  மாவட்ட தலைவர் செல்வநாயகம் மாவட்ட செயலாளர் பகத்சிங்ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..