இராமநாதபுரத்தில் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி

இராம்நாடு ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப், தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இராமநாதபுரம் அரண்மனை வாசல் முன் தொடங்கிய பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா துவங்கி வைத்தார். ரோட்டரி உதவி ஆளுநர் கே.நானா (எ) நாகரத்தினம் முன்னிலை வகித்தார். கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்ட பேரணிஅரண்மனையில் தொடங்கி வண்டிக்காத் தெரு, நகராட்சி அலுவலகம் வழியாக வழி விடு முருகன் கோயில் வாசல் முன் நிறைவடைந்தது.ராம்நாடு ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப்தலைவர் கே.கணேச கண்ணன், செயலாளர் ஜி.ஜெயகுமார், கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி செயலர் ஜீவலதா, முதல்வர் முனைவர் ஜி.முத்துக்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். பட்டயத் தலைவர் தினேஷ் பாபு, முன்னாள் உதவி ஆளுநர்கள் சுகுமாறன், பார்த்தசாரதி, உறுப்பினர்கள் அண்ணாதுரை, பாபு, கோபால் (எ) ராஜா ராம் பாண்டியன், செல்வம், ஜெகன் அகிலன், ஜகத் இளவரசன், அருண்குமார், செங்குட்வன் மற்றும் சமூக ஆர்வலர் சுப. மங்களநாத சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..