ஏர்வாடி அருகே கொம்பூதி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி உற்சவம்

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே கொம்பூதி கிராமத்தில் 36 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி, தேரோட்டம் மற்றும் உறியடி உற்சவம் நடந்தது.இதனையொட்டி பால் குட அபிஷேகம், கிருஷ்ண ஜெயந்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியான உறியடி உற்சவத்தை இராமநாதபுரம் மாவட்ட யாதவ மகா சபை தலைவர் வேலு மனோகரன் தொடங்கி வைத்தார் . விஜயகுமார் உறியடித்தார்.

கொம்பூதி யாதவர் சங்கத் தலைவர் முருகன், செயலாளர் அரியப்பன், பொருளாளா கணபதி, கண்ணன் கோயில் நிர்வாகி வெள்ளைச்சாமி, விழா கமிட்டி தலைவர் சண்முகவேலு, செயலாளர் முத்து, பொருளாளர் பூமிநாதன், துணை செயலாளர்கள் பெருமாள், பாண்டி, செல்வராஜ், பால்ராஜ் , கோயில் அர்ச்சகர் சண்முகவேலு மற்றும் கொம்பூதி கிராம பொதுமக்கள், யாதவர் சங்கம், யாதவ இளையோர், மயூரா யாதவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image