Home செய்திகள் இராமேஸ்வரம் வட்டார தனித்திறன் போட்டிகள்

இராமேஸ்வரம் வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள், ராமநாதபுரம் சீதக்காதி – சேதுபதி விளையாட்டு அரங்கில்பனைக்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒருங்கிணைப்பில்நடந்தது.முதன்மை கல்வி அலுவலர் அய்யணன் தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் முத்துச்சாமி, பாலதண்டாயுதபாணி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். அரசு தேர்வுகள் இயக்குநர் கல்பனாத் ராய் சிறப்புரையாற்றினார். தலைமை ஆசிரியை விஜி வரவேற்றார். இராமேஸ்வரம் வட்டாரத்தில் உள்ள 32 பள்ளிகளைச் சேர்ந்த நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.உடற்கல்வி இயக்குநர்கள் கண்ணதாசன், சசிகுமார், உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரசேகர், முத்து முருகன், அருள் ஜோன், இருதய ராஜ், கிறிஸ்டோபர், சுரேஷ், உடற்கல்வி ஆசிரியைகள் கோபி லட்சுமி, லூர்து மேரி, ஜெரோம் ஜெயக்குமார், மருதசாமி ஆகியோர் போட்டி நடுவர்களாக பணியாற்றினர். போட்டிக்கானஎற்பாடுகளை மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் எம்.ரமேஷ் தலைமையில் உடற்கல்வி ஆசிரியைகள் கவிதா, மகேஸ்வரி உள்ளிட்டோர் செய்தனர். 19 வயதிற்குட்பட்டோர் செஸ் போட்டி மகளிர் பிரிவு ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வ வர்த்தினி அம்பாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி எம்.சுபஸ்ரீ முதலிடம், மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளி எம்.பார்கவி பாரதி இரண்டாமிடம், எம்.ஹரிணி மூன்றாடம் இடம் பிடித்தனர்.17 வயதிற்குட்பட்டோர் செஸ் போட்டி மகளிர் பிரிவு வேர்க்கோடு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி ஜே.எஸ்.மதுமிதா ஸ்ரீ முதலிடம், தங்கச்சிமடம் ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி எஸ்.ஆரோக்கிய டிஸோசா இரண்டாம் இடம், எஸ்.பரிஜா பர்சானா மூன்றாம் இடம் பிடித்தனர்.14 வயதிற்குட்பட்டோர் செஸ் போட்டி மகளிர் பிரிவு அக்காள்மடம் செயின்ட் ஆனிஸ் மேல்நிலைப் பள்ளி பி.ஷிவானி முதலிடம், ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வத வர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளி கே.ஸ்னேகா இரண்டாம் இடம், பனைக்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எம்.பத்மநிஷா மூன்றாம் இடம் பிடித்தனர். 11 வயதிற்குட்பட்டோர் செஸ் போட்டி மகளிர் பிரிவு மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம் தொடக்கப் பள்ளி எச்.பரக்கத் நிஷா முதலிடம், எஸ்.அஸ்பியா இரண்டாம் இடம், ராமேஸ்வரம் நடுநிலைப்பள்ளி எண் 2 – பி.அன்ன சன்டா மூன்றாம் இடம் பிடித்தனர். 19 வயதிற்குட்பட்டோர் செஸ் போட்டி ஆடவர் பிரிவு ராமேஸ்வரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எம்.ஜெயசூர்யா முதலிடம், பனைக்குளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பி.செய்யது அப்துல்லா இரண்டாம் இடம், அக்காள் மடம் செயின்ட் ஆனிஸ் மேல்நிலைப் பள்ளி சி.சுல்ஸ்டன் மூன்றாம் இடம் பிடித்தனர்.17 வயதிற்குட்பட்டோர் செஸ் போட்டி ஆடவர் பிரிவு ராமேஸ்வரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி காளீஸ்வர் முதலிடம், மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளி முகமது அகில் இரண்டாம் இடம், வேர்க்கோடு செயின்ட் ஆனிஸ் மேல்நிலைப் பள்ளி ஜெ.நிகஜ் டிரஸ்கோத்திக் மூன்றாம் இடம் பிடித்தனர்.14 வயதிற்குட்பட்டோர் செஸ் போட்டி ஆடவர் பிரிவு ராமேஸ்வரம் வேர்க்கோடு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி ஏ.ஐால் ஹிர்த்திக் முதலிடம், அழகன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஜி.ரோஹித் இரண்டாம் இடம், புதுவலசை அரபு ஒலியுல்லா உயர்நிலைப் பள்ளி என். ஷாம் மூன்றாம் இடம் பிடித்தனர்.11 வயதிற்குட்பட்டோர் செஸ் போட்டி ஆடவர் பிரிவு பனைக்குளம் தொடக்கப் பள்ளி எஸ்.பயாசுதீன் முதலிடம், அழகன்குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அப்சர்தீன் இரண்டாம் இடம், பனைக்குளம் மூன்றாம் இடம் தொடக்கப் பள்ளி எம்.பசல் அஹமது பிடித்தனர்.19 வயதிற்குட்பட்டோர் கேரம் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவு இரட்டையூரணி அரசு மேல்நிலைப் பள்ளி வி.வித்யாசாகர், எம்.வசந்த் முதலிடம், உச்சிப்புளி நேஷனல் அகாடமி மேல்நிலைப் பள்ளி எம்.முகமது ஷக்கீர் , ஆர்.முகமதீன் அக்ரம் இரண்டாம் இடம் பிடித்தனர்.19 வயதிற்குட்பட்டோர் கேரம் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு இரட்டையூரணி அரசு மேல்நிலைப் பள்ளி வி.வித்யாசாகர், முதலிடம், பனைக்குளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எம்.முகமது யூசுப் அஸ்மி ம் இரண்டாம் இடம் பிடித்தனர்.17 வயதிற்குட்பட்டோர் கேரம் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவு உச்சிப்புளி நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எம்.காமேஷ், எஸ்.தாமோதரா முதலிடம், இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளி என்.சீனிவாசன் , எஸ்.சுலைமான் அலிஇரண்டாம் இடம் பிடித்தனர். 17 வயதிற்குட்பட்டோர் கேரம் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு உச்சிப்புளி நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எம்.காமேஷ், முதலிடம், இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளி என்.சீனிவாசன் இரண்டாம் இடம் பிடித்தனர்.14 வயதிற்குட்பட்டோர் கேரம் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவு இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளி ஏ.பிரஜன், முகமது அஸ்வான் முதலிடம், இரட்டையூரணி அரசு மேல்நிலைப் பள்ளி கே.ரித்திக், கே.ஹரீஷ் இரண்டாம் இடம் பிடித்தனர்.14 வயதிற்குட்பட்டோர் கேரம் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளி ஏ.பிரஜன், முதலிடம், இரட்டையூரணி அரசு மேல்நிலைப் பள்ளி கே.ரித்திக் இரண்டாம் இடம் பிடித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!