சாய்ந்த நிலையில் நெடுஞ்சாலையோர மின்கம்பம்!

ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை செல்லும் மேலக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் ஈ. சி. ஆர் பகுதியில் சாய்ந்த நிலையில் இருக்கும் மின் விளக்கு கம்பம்…இந்த நெடுஞ்சாலை இரவிலும் பகலிலும் நெடுந் தூரம் பயணிக்கும் வாகனங்களுக்கு குறைவு இல்லாத நெடுஞ்சாலை ஆகும். நான்கு வழி சாலை பிரியும் மையமான இடத்தில் சாய்ந்த நிலையில் இருக்கக்கூடிய மின்கம்பத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைவில் கவனம் கொண்டு பழுது நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அந்த வழியே தெரியாமல் இருக்கும் விளக்குகளை கவனித்து அவற்றை பழுது நீக்கி மீண்டும் சரியான முறையில் மின் விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பதன் மூலம் வாகன விபத்துகளை தவிர்த்து வாகன ஓட்டிகளுக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பை அளிக்க முடியும். ஆகவே விரைவில் பணியை துவங்கி அப்பகுதிக்கு நெடுஞ்சாலைப் பகுதிக்கு வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் உடைய விண்ணப்பமாக உள்ளது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image