சர்வதேச விருது வழங்கும் நிறுவனங்களின் உண்மைத்தன்மை என்ன??… ஒரு ஆய்வு பார்வை..

சமீப காலமாக இணையதளம், சமூக வலைத்தளங்கள், பத்திரிக்கை என பல முனைகளில் இருந்து விருதுகள், அங்கீகாரம், முனைவர் பட்டம் என பல நபர்கள் பெறுவதாக விளம்பரங்களும், அறிவிப்புகளும் வருவதை நாம் பார்த்து வருகிறோம்.  ஆனால் இவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை தன்மையுடன் வழங்கப்படுகிறது என்பது ஒரு பெரிய கேள்வி குறியும், சந்தேகமும் தான்.

அதே போல் மறுபுறம் விருது வழங்குவதாக கூறி பல லட்சம் மோசடி நடைபெறுவதாக குற்றச்சாட்டு.  இதில் இந்நிறுவனம்தான் உடந்தை என குறியீடு இல்லாமல், அனைத்து உள்ளூர், சர்வதேச நிறுவனங்கள் மீதும் ஒரே பார்வை.  இதனால் குழப்பம் அடைவது பொதுமக்கள் மட்டும் அல்லாமல், பாதிக்கப்படுவது சேவை மனப்பான்மையுடன் செயல்படும் தொண்டு நிறுவனங்களும்தான்.

இதற்கு சில அடிப்படை காரணங்களையும் நாம். அறிந்து கொள்ள முடியும், உதாரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சாதனை படைப்பவர்கள் பணம் படைத்தவர்களாக இருந்தால் மட்டுமே கின்னஸ், பிரிட்டானிகா போன்ற சர்வதேச நிறுவனங்களின் அங்கீகாரம் பெற முடியும், அதை விட திறமைசாலிகள் பின் தங்கிய நிலையில் அல்லது கிராமத்து பகுதியை சார்ந்தவர்களாக இருந்தால், அவருடைய திறமைகள் வெளிப்படுத்த முடியாமலே முடங்கிவிடும்.  அதையும் மீறி வெளிப்படுத்த முனைபவர்கள் பல வேறு இடைதரகர்கள் மற்றும் பல்லாயிரங்கள் செலவு செய்தால் மட்டுமே அடையும் சூழல்.  அந்த நிலையை மாற்றும் வண்ணம் இந்திய மக்கள், குறிப்பாக பின்தங்கிய மக்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக இத்துறையில் அனுபவம் உள்ளவர்கள் அரசு அங்கீகாரத்துடன் தொடங்கி அங்கீகாரம் வழங்க தொடங்கினர்.  எந்த ஓரை காரியத்துக்கும் எதிர் வினை இருப்பது போல், சேவை நிறுவனங்களின் சேவைதன்மைக்கு களங்கம் விளைவிப்பது போல் போலி நிறுவனங்கள் உருவாகி அறியா மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் பணியில் இறங்கினர்.  அதன் விளைவு சேவை மனப்பான்மையுடன் வந்தவர்களுக்கும் மோசடி பட்டம், அவதூறுகள், இதன் ஆழ்ந்த உண்மை தன்மை புரியாமல் தினசரிகளும், சமூக வலைத்தளங்களும் பொதுப்படையான குற்றச்சாட்டு, விளைவு நற்பணி செய்ய வந்தவர்களுக்கு மன உளைச்சல், உண்மையில் சாதனை படைத்தவர்களுக்கு எது சரி? என்ற குழப்பம்.

இதன் பின்புலம் மற்றும் இப்பிரச்சினைக்கான உண்மை நிலை அறிய, 2017ம் வருடம் மண்டபத்தில் தொடங்கப்பட்டு தொடர் நிகழ்வுகளும், உதவி பணிகளும், சமீபத்தில் தினசரி பத்திரிக்கைகளில் பேசப்பட்டவருமான வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் கலைவாணியை அணுகினோம்.  அவரிடம் சில கேள்விகள்:-

  • சமீபத்தில் பரவலாக விருதுகள், பட்டங்கள் வழங்குவதாக பல் வேறு நிறுவனங்கள், அதன் மூலம் பல ஆயிரம் முதல் லட்சங்கள் வரை பெறுவதாக குற்றச்சாட்டு எழுகிறது, அதற்கு உங்களுடைய பதில் என்ன??..

வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை சார்பில் ஒரு விழிப்புணர்வு செய்தியை பதிவிடுவது எங்கே கடமை. முதலில்  விருது பெறவேண்டும் என்கிற எண்ணத்தில் இலட்சக்கணக்கில் பணம் செலவழிக்கவேண்டும் எனும் எண்ணம் இருந்தால் இதை நிச்சயமாக படிக்க வேண்டும்.  உங்களைத்தேடி யாரோ ஒருவர் விருது தருகிறொம் என தொடர்புகொண்டால் நீங்கள் முதலில் உங்களோடு பேசும் நபரின் உண்மையான முழு விபரத்தையும் அறியும்படி கேள்வி கேளுங்கள்.

பணத்தை முன்னிலைப்படுத்தி அந்த நபரின் பேச்சு இருந்தால் மீண்டும் அவர்களைத்தொடர்புகொள்வதை தவிருங்கள். உங்களோடு பேசும் நபர் கூறும் நிறுவனம் எப்படிப்பட்டது என்பதை இணையதளம் வாயிலாக அல்லது இதற்கு முன்பு அந்த நிறுவனத்தில் விருது பெற்றவர்கள் வாயிலாக அறிந்துகொள்ளுங்கள்.

அயல்நாட்டிலிருந்து பார்வையிட வருவார்கள் என்றால் வருபவர்கள் யார்? உண்மையிலேயே அயல்நாட்டிலிருந்து வருபவர்தானா என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். சம்பந்தப்பட்ட நிறுவனம் அரசிடம் பதிவுபெற்ற நிறுவனமா என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். உங்களைத்தொடர்புகொள்ளும் நபர் உண்மையிலேயே அவர் கூறுகிற நிறுவனத்தோடு தொடர்பில் உள்ளவரா என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

தனி நபரின் வங்கி எண்ணிற்கு பணம் தரச்சொன்னால் நிச்சயமாக செய்யாதீர்கள். கட்டணம் கேட்டால் அதற்கு உரிய காரணங்களை கேட்டறிந்து அதற்குத்தகுந்த கட்டணம் செலுத்தலாமே தவிர கண்மூடித்தனமாக இலட்சக்கணக்கிலோ அல்லது அந்த நபர் கேட்க கேட்க பணம் அளித்துக்கொண்டிருப்பதோ தவறாகும். முழு விருப்பம் இல்லாமல் உங்கள் சாதனைகளுக்கு விருது பெற எவ்வித முயற்சியும் எடுக்காதீர்கள்.

மக்கள் இப்படி அயல் மாநில அயல் நாட்டு நிறுவனங்களிடம் இலட்சக்கணக்கில் ஏஜெண்டுகளை ஏமாறக்கூடாது என்பதற்காகத்தான் வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளையானது மறைந்த மாமேதை Dr.A.P.J.அப்துல் கலாம் இல்லத்தில் வைத்து மிக எளிமையாக துவங்கப்பட்டு முழு அரசு அங்கீகாரத்துடன் ISO தரசான்றிதழ் பெற்று இதுவரை தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற பல ஏழை மக்களிலிருந்தும் சாதனையாளர்களை உருவாக்கியிருக்கிறது.

  • உங்கள் நிறுவனம் மற்ற அதாவது பெயரளவில் செயல்படுபவர்களுக்கு மத்தியில் எவ்வாறு மாறுபடுகின்றது??.

வில் மெடல்ஸ் நிறுவனம் முழு அரசு அங்கீகாரத்துடன் 2017ஆம் ஆண்டுமுதல் செயல்பட்டுவரும் நிறுவனம் ஆகும்.இந்நிறுவனத்தின் கணக்குவழக்குகள் முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட கணக்குத்தனிக்கையாளரால் சரிபார்க்கப்பட்டு வருமான வரிகள் செலுத்தப்படுகிறது. மேலும் ISO எனப்படும் INTERNATIONAL STANDARDIZED ORGANISATION எனும் தரச்சான்றிதழையும் பல கட்ட ஆய்வுகளுக்குப்பிறகு வில் மெடல்ஸ் பெற்றுள்ளது.

வில் மெடல் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை தனித்திறமை மற்றும் குழு திறமையை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டுச்  சான்றிதழ்கள், கேடயங்கள், பதக்கங்களை வழங்கி வருகிறது. இந்த நிறுவனமானது முறைப்படி அரசு அங்கீகாரம் பெற்று இயங்கி வரும் அமைப்பாகும். இந்நிறுவனம் தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் கொண்ட குழுவினரால் செயல்பட்டு வருகிறது. திறமையாளர்களின் திறமைகளை நேரில் ஆய்வு செய்தும் நேரில் சென்று ஆய்வு செய்ய இயலாத பட்சத்தில் அதற்கான ஆதாரங்களை ஆய்வு செய்தும் பாராட்டிதழ்களை வழங்கி வருகிறது.

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சமூக சேவகர்கள் ,கலைஞர்கள்,விளையாட்டு வீரர்கள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோருக்கு உயர் தமிழர் எனும் விருதையும் வழங்கி வருகிறது.அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு வழிகாட்டுதல் மற்றும் அறிவுரை பகர்தல்,தன்னம்பிக்கை உரையாற்றுதல் ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு உதவுதல்,வயதான நபர்களுக்கு உடை ,மருத்துவம் உள்ளிட்ட உதவிகளையும் இந்நிறுவனம் செய்து வருகிறது.

இந்நிறுவனம் அயல் நாட்டில் உள்ள நிறுவனமோ வணிக நிறுவனமோ இல்லை. இது ஒரு அறக்கட்டளை ஆகும்.மக்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் செயல்களில் இந்நிறுவனம் ஈடுபட்டுவருகிறது. இந்நிறுவனத்திற்கு என இராமநாதபுரம் மாவட்டம் தவிர வேறு எங்கும் கிளை நிறுவனங்கள் கிடையாது. இதன் நிறுவனர் & தலைவர் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற கலைவாணி,செயலர் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற தஹ்மிதா பானு ஆகியோர் ஆவர்.இந்நிறுவனத்திற்கு வேறு எங்கும் எந்த நாட்டிலும் தலைவர்கள் கிடையாது.இந்நிறுவனத்திற்கு ஏதேனும் அமைப்போ தனி நபரோ இந்நிறுவனத்தின் செயல்பாடுகளுக்காக விரும்பினால் நிதி உதவி அளிக்கலாம்.

  • உங்கள் நிறுவனத்தின் தனித்தன்மை பற்றி நீங்கள் கூற விரும்புவது என்ன…?

இந்நிறுவனம் சேவை நோக்கத்துடன் இயங்கி வரக்கூடியது ஆகும். இந்நிறுவனத்தின் நிறுவனர் தலைவர் கலைவாணி கூறியதன்படி இந்நிறுவனத்திற்கு சாதனையாளர்களை அறிமுகம் செய்து வைக்க யாரையும் பணியில் அமர்த்தவில்லை. மக்கள் யாரிடமும் எங்கள் நிறுவனத்தின் பெயரைச்சொல்லி பணம் சம்பாதிக்கும் நோக்கில் உள்ளவர்கள் அணுகினால் உடனே எங்கள் நிறுவனத்தை தொடர்புகொண்டு சம்பந்தப்பட்ட நபர் மீது புகார் தெரிவிக்கலாம். எங்கள் நிறுவனத்தின் உறுப்பினரல்லாத யாரையும் மக்கள் நம்பி ஏமார்ந்துவிட வேண்டாம். மேலும் வெளிநாடுகளில் இருந்தெல்லாம் எங்கள் நிறுவனத்தில் சாதனையாளர் பட்டம் பெற யாரும் சோதனை செய்ய வரப்போவதில்லை. எங்கள் நிறுவனம் முழுக்க முழுக்க தமிழகத்தை சேர்ந்த நிறுவனம் ஆகும். இதற்கென்று எந்த நாட்டிலும் அலுவலகம் கிடையாது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..