பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வீரராகவராவ் அறிவிப்பு

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி, கீழக்கரை ஆகிய நகராட்சி பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் பயன் பெறலாம். இத்திட்டத்தின்கீழ் பயன் பெறுவதற்கு பயனாளிகளுக்கு வேறு எங்கும் கான்கிரீட் வீடுகள் இருக்கக் கூடாது. வீடு கட்டுவதற்கான இடத்தின் நில உரிமைக்கான பதிவு செய்யப்பட்ட பத்திரம் அல்லது பட்டா வைத்திருக்க வேண்டும்.

பயனாளியின் மாத வருமானம் ரூ.25,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். பயனாளியின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். புதிதாக கட்டப்படவுள்ள குடியிருப்பின் பரப்பளவு 300 சதுர அடியில் இருந்து 500 சதுர அடி வரை இருக்க வேண்டும். இதில் வசிப்பறை, படுக்கையறை, சமையலறை மற்றும் குளியலறை அமைக்கப்பட வேண்டும்.வீடு கட்டுவதற்கான மானியமாக ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் நான்கு கட்டமாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளிகள் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

இத்தகவலை கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image