விவசாய பாசனத்திற்கு பாபநாசம் அணையிலிருந்து நீர் திறப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் பாபநாசம் சேர்வலாறு மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்த கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாய நீர் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பாபநாசம் அணையில் இருந்து விவசாய நீர் பாசனத்திற்காக 21.08.19 அன்று காலை தண்ணீர் திறந்து வைத்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், பாபநாசம் அணையில் இருந்து முதல் கட்டமாக விவசாயம், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 600 கன அடி அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.இதன் மூலம் அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை வட்டங்களில் உள்ள 24,090 ஏக்கர் நிலம் பயன் பெறும் என்றும்,இதைதொடர்ந்து வருகின்ற 26ஆம் முதல் முதலமைச்சரின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் எனவும் தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image