பலரின் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் பெற்று வரும் ஒளிப்பதிவாளர் சரவணன்.!

நீயூஸ் 18 தமிழ்நாடு திருச்சி ஒளிப்பதிவாளர் . சரவணகுமார்  திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, முன்னாள் ஆட்டோவில் சென்ற அரியலூரைச் சேர்ந்த ஜமீன் பானு தவற விட்ட பையை எடுத்து, கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.அதில் ₹ 4.50 லட்சம் மதிப்புள்ள 15 பவுன் தங்க நகைகள் இருந்தன. அவற்றை தவற விட்டவர்களிடம் சரவணகுமார் முன்னிலையில் போலீசார் ஒப்படைத்தனர்.

சாலையில் கிடந்த பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஒளிப்பதிவாளர் சரவணகுமாரை தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சகாயராஜ், மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் சந்திரிகா, சத்தியப்பாதை இதழின் ஆசிரியரும் கீழை நியூஸ் நிறுவனரான  சையது ஆப்தீன், மற்றும் அனைத்து மாவட்ட பத்திரிகை நண்பர்களும், வெகுவாக பாராட்டி வாழ்த்துக்கள் கூறியுள்ளனர்.மேலும் போலீசாரும் நகையின் உரிமையாளரும் பாராட்டி, மகிழ்ந்து
நன்றி கூறினர்.நமது சத்தியப்பாதை புலனாய்வு இதழ் மற்றும் கீழை நியூஸ் நிறுவனம் சார்பாகவும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் சரவணன் அவர்களுக்கு.!

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image