மதுபான விடுதியிலிருந்து கொட்டப்படும் குப்பைகளால் நிரம்பிய கால்வாய்…

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பைபாஸ் சாலை எல்லிஸ் நகர் 70 அடி சாலையிலுள்ள மதுபான விடுதியில் இருந்து சேமிக்கும் குப்பைகளை மற்றும் இறைச்சி கழிவுகளை எல்லிஸ் நகர் ரோடில் செல்லும் கிருதுமால் நதியில் கொட்டி குப்பை கூளமாக ஆக்கும் மதுபான நிர்வாகம் ..கேட்டதற்கு நாங்கள் இங்கே தான் கொட்டுவோம் இங்குதான் கொட்ட சொல்லி இருக்கிறார்கள் என அலட்சியமாக  பதிலளித்தார்கள் ..அந்த சாலையை கடக்கும் பொழுது மிகமிக துர்நாற்றம் வீசுகிறது ..மேலும் இந்த கால்வாயும் பிளாஸ்டிக் கழிவுகளை அளவு இறைச்சிக் கழிவுகளால் முற்றிலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது ..இதுபோன்று கழிவுகளை கால்வாயில் கொட்டும் நபர்கள் மீது மதுரை மாநகராட்சி ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள் மேலும் இதனை கவனிக்க தவறிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த கால்வாயை தூர்வாரி நீர் செல்லும் வகையில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை

புனித ரமலான் வாழ்த்துக்கள்..