மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்டத்தை முறையாக அமல்படுத்தாத மத்திய அரசை கண்டித்து டெல்லியில் மாற்றுத்திறனாளிகள் 24 மணி நேர தொடர் தர்ணா போராட்டம்.

மத்திய ஆட்சியில் உள்ள மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த 2016ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டத்தை (ஊனமுற்றோருக்கான உரிமை சட்டம் 2016) நிறைவேற்றியது.சட்டம் நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான எந்த வித முன் முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.இதனால் மாற்றுத்திறனாளிகள் போராடி பெற்ற சட்டம் பயனில்லாத நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்டத்தை முறையாக அமல்படுத்த வலியுறுத்தி வருகிற நவம்பர் 25 காலை 10.00 மணிமுதல் நவம்பர் 26 காலை 10.00 மணிவரை 24 மணிநேர தொடர் தர்ணா போராட்டத்தை டெல்லியில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தேசிய அளவில் அங்கம் வகிக்கும் ஊனமுற்றோருக்கான தேசிய மேடையின் சார்பில் நடைபெற உள்ளது.இந்த போராட்டத்தில் நாடு முழுவதுமிருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகளை திரட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகளை முழுமூச்சாக அனைத்து மாவட்டக்குழுக்களும் செய்து வருகின்றன.அதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து நூறு மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டடுள்ளது.

நமக்கான உரிமை சட்டத்தை நிறைவேற்ற நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுமாறு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர் S. பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..