மறு அறிவிப்பு வரும் வரை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்-மீன்வளத்துறை.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் தென்மேற்கு திசையில் வீசக் கூடும் என்பதால், கடல் அலை 2.8 மற்றும் 3.4 மீட்டர் உயரம் வரை எழக்கூடும். எனவே, மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது என அறிவுறுத்தப்படுகிறதுமேலும் கடற்கரை ஓரங்களில் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் தாழ்வான இடங்களில் கடல் நீர் உள் புகும் அபாயம் உள்ளதால், கடலோரங்களில் வசிக்கும் மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது மீனவர்கள் அனைவரும் தங்களின் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நங்கூரமிட்டு நிறுத்தமாறும் அருகருகே படகினை நிறுத்தாமல், கரையில் இருந்து சற்று தொலைவில் நங்கூரமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மற்றும் மீனவர்கள் தங்களது மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.இதனால் மீனவர்கள் யாரும் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல கூடாது என ராமேஸ்வரம் மீன்வள உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..