பல அதிசயங்களை தாங்கி நிற்கும் “நயாகரா நீழ்வீழ்ச்சி” நம் பார்வையில்…

நயகரா நீர்வீழ்ச்சி உலகிலேயே மிகவும் உயரமான மற்றும் அதிசயமான நீர்வீழ்ச்சியாக கருதப்படுகிறது. இந்நீர்வீழ்ச்சி 12,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக வரலாற்று ஆய்வாளர்கள்  கூறுகிறார்கள். மேலும் 1678ம் ஆண்டு  லூயிஸ்ஹென்னிபென் என்பவரால் கண்டறியப்பட்டது.

இந்த நயகரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா மற்றும் கனடா இரண்டு பகுதியிலும்அமைந்துஉள்ளது.  இந்த இரண்டு நாட்டையும் ரெயின்போ(Rainbow Bridge) என்ற பாலம் இணைக்கிறது.  இந்த நயகரா வீழ்ச்சியில் விழும் தண்ணீரில் இருந்து கனடா மற்றும் அமெரிக்கா சுமார் 2.5மில்லியன் கிலோவாட் மின்சாரம்தயாரிக்கப்படுகிறது.  இந்த நீர்வீழ்ச்சி கனடாபகுதிHorse Shoe falls மற்றும் அமெரிக்கன் Bridal Falls என இருபகுதிநாக உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் நிமிடத்திற்கு 1.68,000 கனமீட்டர் கொள்ளளவு தண்ணீர் விழுகிறது.

பொதுமக்கள் நயகரா வீழ்ச்சியை அருகில் சென்று

 காணும் வகையில் அமெரிக்கா மற்றும் கனடா பகுதியில் இருந்து நீர்வீழ்ச்சியின் அருகில் 154அடி கீழ்பகுதிக்கு அழைத்து செல்கிறார்கள்இதற்குபெயர்“Maid of Mist” என அழைக்கப்படுகிறது.  அதை போல் அமெரிக்கா பகுதியில் விழும் நீர்வீழ்ச்சியை அதன் அடிவாரத்தில் நீர்சாரலை உணரும் வகையில் கண்டுகளிக்கும் வகையில் “Cave of Winds” எனும் பகுதிஅமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பொதுமக்கள் அருகில் சென்று அருவியை கண்டு ரசிக்கலாம்.

இங்கு வருடம்தோறும் பலலட்சகணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.  மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வண்ணம் தினந்தோறும் வாணவேடிக்கைகளும், கண்கவர் மின்னொளி காட்சிகளும் நடத்தப்படுகிறது.

அதே போல் இந்த வீழ்ச்சி நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை உள்ள குளிர் காலத்தில் உறைந்து பனிமலையாக காட்சி அளிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..