தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் ஆட்டோவில் கடத்தி வந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ்ஆனந்த் மற்றும் போலீசார் நேற்று20.08.19 இரவு சேர்ந்தபூமங்கலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புன்னக்காயலை நோக்கிச் சென்ற லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் குளிர்பான பாட்டில்கள் இருந்தது, மேலும் அதன் அடியில் கஞ்சா மூடைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவில் 9 மூடைகளில் இருந்த 300 கிலோ கஞ்சாவையும், லோடு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், வேனை ஓட்டிவந்த வடக்கு ஆத்தூர் யாதவர் தெருவைச் சேர்ந்த வெங்கடாசலம் (42) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அந்த மூடைகளை மூக்காணி பஸ் நிறுத்தத்தில் இருந்து ஏற்றிவந்தாக தெரிவித்துள்ளார். கம்பத்தில் இருந்து அரசு பஸ்சில் இந்த கஞ்சா மூடைகள் கடத்திவரப்பட்டு, பின்னர் லோடு ஆட்டோவில் கொண்டு வரும்போது போலீசாரிடம் சிக்கியுள்ளது. இதில் புன்னக்காயலைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image