வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம்.

வருகின்ற 01.09.2019 சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இந்த வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை 09.09.19, 23.09.19, 07.10.19 மற்றும் 14.10.19 ஆகிய 4 நாட்கள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர் சிறப்பு முகாம் காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெற உள்ளது.

இதில் 18 வயது நிரம்பிய (31.12.2000 மற்றும் அதற்கு முன் பிறந்திருக்க வேண்டும்) புதிய வாக்காளர்கள் அனைவரும் தங்களுடைய பகுதியில் இருக்கும் வாக்குச் சாவடிக்கு சென்று படிவம்(6) ஐ பூர்த்தி செய்து தங்களை இணைத்து கொள்வதற்காகவும் , பெயர் நீக்கத்திற்கு படிவம் – 7 ம், வாக்காளர் அட்டையில் திருத்தத்திற்கு படிவம் 8 ம், முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 A வும் , ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளவும். இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கீழை நியூஸ் வலைதள பக்கத்தின் சார்பாக கேட்டு கொள்கின்றோம்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..