இராமநாதபுரம் – புகைப்பட தின விழா

இராமநாதபுரம் மாவட்டம் நகர் போட்டோ &வீடியோ உரிமையாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கம் சார்பில்புகைப்பட தின விழாவிற்காக சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட புகைப்பட போட்டியின் பரிசளிப்பு விழாவும், உலக புகைப்பட தினவிழாவும்  19.8.2019 மாலை 4.30 மணியளவில் தாஜ் மினி மஹாலில் நடைபெற்றது.இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் மாவட்ட பத்திரிக்கை செய்தி துறையின் தலைவர்  தனபாலன் சிறப்புரையாற்றினார்

ராமநாதபுரத்தில் சிறந்த புகைபடகலைஞர்களாக 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர் இதில் சிறந்த புகைபடக்கலைஞராக ரெட் மீடியா சுரேஷ் குமார் தேர்வு செய்து சான்றிதழ் மற்றும் கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது இரண்டாம் பிடித்த கணீணி ஸ்டுடியோ. வேல்முருகன் மற்றும் மூன்றாம் இடத்தை முத்து ஸ்டுடியோ அசோக் பெற்றுக்கொண்டார் இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இராமநாதபுரம் நகர் போட்டோ &வீடியோ உரிமையாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் நலசங்கத்தின் தலைவர். பிரபு .செயலாளர். ஹாஜா. பொருளாளர் புலிகுட்டி ராஜா ஆகியோர்கள் செய்திருந்தனர்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image