கஞ்சா வியாபாரியை திருத்திய காவல் ஆய்வாளர்

.மதுரை மாநகர்  திலகர் திடல் காவல் நிலைய ஆய்வாளர்  பிளவர்ஷீலா  மதுரை மாநகரில் கஞ்சா தொழிலை தொடர்ந்து செய்து வந்த இப்ராஹிம்ஷா என்பவரை நேரில் அழைத்து தங்கள் மீது மதுரை மாநகரில் 7 கஞ்சா வழக்குகள் உள்ளன என்றும் மேலும் இன்றைய இளைஞர்கள் கஞ்சா பயன்படுத்துவதால் என்னென்ன குற்றச்சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் விரிவாக விளக்கினார். இப்ராஹிம்ஷா கஞ்சா தொழில் செய்வதை விட்டுவிடுவதாக காவல் ஆய்வாளரிடம் தெரிவித்ததால் உடனே ஆய்வாளர் இப்ராஹிம்ஷாவுக்கு தனது சொந்த செலவில் சைக்கிள் மற்றும் ஒரு மூட்டை உப்பு வாங்கிகொடுத்து உப்பு வியாபாரம் செய்ய உதவி புரிந்தார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image