Home செய்திகள் கீழக்கரையில் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற கீழக்கரை சமூக அமைப்புகள் பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டை.முதல்வரை சந்திக்க முடிவு.

கீழக்கரையில் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற கீழக்கரை சமூக அமைப்புகள் பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டை.முதல்வரை சந்திக்க முடிவு.

by mohan

கீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுக்கடைகளும் பொதுமக்களுக்கும்,சட்ட விதிமுறைகளுக்கு முரணாக இருக்கின்றது.இந்த இரண்டு மதுபானக்கடைகளை அகற்ற தொடந்து பல சமூக அமைப்புகள்,அரசியல் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.இதன் ஒரு பகுதியாக வரும் 26 ம்தேதி காலை 10 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் (C P M) சார்பாக மதுக்கடைகள் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்து இருப்பதாக அறிவித்து இருக்கின்றார்கள்.சமூக அமைப்புகள்,அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடந்து மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியும் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் இதை அகற்ற வேண்டுமேன்றே தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறார்கள்.

கடந்த 18ம் தேதி நடைபெற்ற S D P I கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வரும் 30ம்தேதி இந்த இரண்டு மதுபானக்கடைகளை அகற்றாவிட்டால் செப்டம்பர் 1ம்தேதி பொதுமக்களை ஒன்றினைத்து பூட்டு போடும் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றார்கள்.இதன் தொடர் முயற்சியாக இந்த இரண்டு மதுக்கடைகளை அகற்ற ஆர்வத்தோடு இருக்கும் சமூக அமைப்புகளை ஒன்றினைத்து இந்த கடைகளால் மனம் வெதும்பி இருக்கும் பொதுமக்களிடம்.அதிக அளவில் கையேழுத்து பெற்று தமிழக முதல்வர்,சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு கொடுப்பதோடு இந்த மதுக்கடைகளில் மது அருந்தி போதையில் கிடக்கும் குடி மகன்களின் அவல நிலைகளை புகைப்பட ஆதாரத்தோடு எடுத்து கூறி முறையிட மக்கள் நல பாதுகாப்புக் கழகம்,இஸ்லாமிய கல்வி சங்கம், மஜ்மவுல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை, வடக்குத் தெரு சமூக நல அமைப்பு, சட்ட விழிப்புணர்வு இயக்கம், கீழக்கரை நகர் நல இயக்கம் முயற்சி மேற்கொள்ள இருப்பதாக இஸ்லாமிய கல்வி சங்கத்தின் பொருளாளர் சல்மான் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!