Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை சமூக அமைப்புகள்,சமுதாய நல்லிணக்கத்திற்கு கலங்கரை விளக்கமாக நடைபெற்ற சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு…

கீழக்கரை சமூக அமைப்புகள்,சமுதாய நல்லிணக்கத்திற்கு கலங்கரை விளக்கமாக நடைபெற்ற சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு…

by ஆசிரியர்

இன்று (17/08/2019) கீழக்கரை ஹூசைனிய்யா மஹாலில் கீழக்கரையில் பல சமூக தொண்டுகளை செய்து வரும் மக்கள் நல பாதுகாப்புக்கழகம், வடக்குத்தெரு சமூக நல அமைப்பு (N A S A), இஸ்லாமிய கல்வி சங்கம், முஸ்லிம் பொது நல சங்கம், முஸ்லிம் வாலிபர் முன்னேற்றம் சங்கம் (M Y F A), கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம் மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு மற்றும் கலந்துறையாடல் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் வரவேற்புரையை சட்ட விழிப்புணர்வு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் நிகழ்தினார்.அனைத்து சமூக,சமுதாய அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

தன் சிறப்புரையில் பேசிய அவர் இப்படிப்பட்ட சிறப்பு மிகு நிகழ்ச்சிகளால் சமூக நல்லிணக்கம் மேம்பாடு அமைவதோடு நாட்டில் மதத்தின் பெயரால் அரசியல் நடத்துபவர்கள் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் என்றார்.இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்ற தலைப்பில் காயல்பட்டினம் ஜகரிய்யா,சதக்கத்துல்லாஹ் உமரி சிறப்புரை ஆற்றினார்கள். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை தலைவர் கலைவாணி பேசுகையில், “சமுக நல்லிணக்கத்திற்கு எங்கள் அறக்கட்டளை எடுத்துக்காட்டாக திகழ்கின்றது எங்கள் அறக்கட்டளையின் முதன்மைச்செயலாராக சமூக பணி செய்வது தஹ்மீதா பானு என்ற முஸ்லிம் பெண் ஆவார். எங்கள் அறக்கட்டளையில் உதவி கேட்டு வருபவர்களுக்கு நான் முஸ்லிம் பிரமுகர்களை அனுகி உதவி செய்ய கேட்டு கொள்வதாகவும், தன் மேல் உள்ள நம்பிக்கையில் முஸ்லிம் அறக்கட்டளையை சேர்ந்த அன்பர்கள் தொடந்து உதவி செய்து வருவதாகவும் இதில் கீழக்கரையை சேர்ந்த சத்திய பாதை கல்வி தர்ம அறக்கட்டளை நிறுவனர் செய்யது ஆப்தீன் முக்கியமானவர்” என்றார். விழாவில் இஸ்லாம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராமநாதபுரம் தமுமுக மூத்த தலைவர் சலீமுல்லாகான் மற்றும் பல நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்வின்  நன்றியுரையை இஸ்லாமிய கல்வி சங்க தலைவர் முஹம்மது தவ்ஹீத் ஆலீம் ஆற்றினார். நிகழ்ச்சி தொகுப்புரையை முஹம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர் அஹமது ஹூசைன் ஆசிப் செய்தார்.

நிகழ்ச்சியில் இஸ்லாம் சம்பந்தப்பட்ட பயனுள்ள கேள்விகளை கேட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிறைவில் இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து அளித்து சிறப்பிக்கப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!