டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்பாட்டம்

கிருணஷ்ணகிரி மாவட்டம் நெடுசாலை கிராமத்தில் டாஸ்மாக் ஊழியர் எஸ்.ராஜா என்பவரை கழுத்தை அறுத்து படுகொலை செய்து, கடையில் கொள்ளையடித்த சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருவண்ணாமலை மாவட்ட அட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

டாஸ்மாக் சங்க தொமுச தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தொமுச பேரவை பொதுச் செயலாளர் க.சௌந்தரராஜன், சிஐடியு மாவட்ட செயலாளர் இரா.பாரி மற்றும் எஸ்.ஆனந்தன், ஏஐடியுசி நிர்வாகிகள் வழக்கறிஞர் முத்தையன், மற்றும் மாதேஸ்வரன், இரா. தங்கராஜ், விசிக நிர்வாகிகள் வழக்கறிஞர் க.மோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் அனைத்து சங்கங்கள் சார்பில் தொமுச ஆறுமுகம், சிஐடியு வெங்கடேசன் ஏஐடியுசி வரதராஜன், பாட்டாளி தொழிற் சங்கம் செல்வராஜ் முத்துகனேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்., பாதுகாப்பற்ற இடங்களிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மூர்த்தி, திருவண்ணாமலை

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…

Be the first to comment

Leave a Reply