வடமதுரை அருகே பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான தரைபாலம் கட்டிமுடிக்கபட்டு பயன்பாட்டிற்காக திறக்கப் பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே வேலாயுதம் பாளையம் செல்லும் வழியில் உள்ள பாதை பழுதடைந்த நிலையில் இருந்ததால் அப்பகுதி பொது மக்கள் நீண்ட நாட்களாக பாலத்தை கட்டிதரவேண்டி நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர்.இந்நிலையில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் முயற்சியால் ஒரு கோடியே 90 லட்சம் அரசு நிதி ஒதுக்கப்பட்டு தரைபாலம் கட்டிமுடிக்கப்பட்டது. பாலத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மகிழ்ச்சி மிகுதியால் பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…

Be the first to comment

Leave a Reply