தூத்துக்குடியில் செப். 15ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம்..

தூத்துக்குடியில் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி, மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நடக்கிறது. இதில், ஜாதி மத பாகுபாறின்றி அனைவரும் கலந்துகொண்டு தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கலாம்.இது குறித்து, தூத்துக்குடி சில்வர்புரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க இயக்குனர் அருட்தந்தை கிராசிஸ் மைக்கேல் கூறியதாவது; “அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறும் வகையில், தூத்துக்குடி சில்வர்புரத்தில் அமைந்துள்ள லூசியா மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி காலை 9 மணிக்கு, சில்வர்புரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தில் நடைபெறுகிறது. இதில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் ஜாதி, மத பாகுபாறின்றி கலந்துகொண்டு, தங்களின் வாழ்க்கைத் துணையை தாங்களே தேர்ந்தெடுக்கலாம்.இதில் கலந்துகொள்ள விரும்பும் ஆண் மற்றும் பெண்கள், போஸ்ட் கார்டு அளவிலான தங்களின் முழு அளவு புகைப்படம், திருமண சுயவிவரம், ஆதார் கார்டு ஜெராக்ஸ் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை போன்ற ஆவணங்களை கொண்டுவர வேண்டும்.இந்த நிகழ்ச்சியில் தேர்வுசெய்யப்படும் ஒவ்வொரு ஜோடிக்கும், தங்கத்தாலி, திருமண ஆடைகள், மிக்ஸி, கிரைண்டர், குளிர் சாதனப்பெட்டி உள்ளிட்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீதன பொருட்கள் வழங்கி, வரும் டிசம்பர் மாதம் 13ம் தேதி வெகு விமர்சையாக திருமணம் நடத்தி வைக்கப்படும்.

இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, +91 9487384716 மற்றும் +91 9952695291 என்ற அலைபேசி எண்ணகளில் தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

– சிறப்பு செய்தியாளர் ப.ஞானமுத்து

புனித ரமலான் வாழ்த்துக்கள்..