மத நல்லிணக்க முளைப்பாரி விழா முஸ்லிம்கள் உற்சாக வரவேற்பு

இராமநாதபுரம் புளிக்காரத் தெருமுத்துமாரி அம்மன் கோயில் முளைப்பாரி விழா ஆகஸ்ட் 4 ஆம் தேதி முத்தெடுத்து, ஆகஸ்ட் 6 ஆம் தேதி காப்பு கட்டுடன் முத்து பரப்பி விழா தொடங்கியது. இதனையொட்டி ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை தினமும் இரவு இளையோர் ஒயிலாட்டம், மகளிர் கும்மியாட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து நேற்றிரவு அம்மன் கரகம் எடுத்து ஊர்வலமாக கோயில் வந்தடைந்தது. பின்னர் அம்மன் கரகத்துடன் முளைப்பாரி சுமந்து பெண்கள் கோயிலை மூன்று முறை வலம் வந்தனர்.இதன் தொடர்ச்சியாக, அம்மன் கரகம் இன்று காலை பக்தர்கள் தரிசனத்திற்கு வீதியுலா சென்றது. இதனையடுத்து கோயில் வாசல் முன் பெண்கள் பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கிட்டு வழிபட்டனர். மாலையில் இளைஞர்கள் ஒயிலாட்டத்திற்கு பிறகு கோயில் நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர். இதன் பின்னர் கோயில் முன் வைத்த முளைப்பாரிகள் அம்மன் கரகத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது.பாசிப் பட்டறை தெருவந்தபோது,புளிக்காரத் தெரு முத்துமாரியம்மன் கோயில் கமிட்டி தலைவர் அங்குச் சாமி தலைமையில் பாசி பட்டறை. முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் கென்னடி (எ) முகமது நிஷார், அகமது நயினார், சஸ்லான், ஹாஜி ஜபருல்லா ஆகியோர் உற்சாக வரவேற்பளித்தனர். புளிக்காரத் தெரு அம்மன் கோயில் முளைப்பாரி விழாவில் இந்துக்களுக்கு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் மத நல்லிணக்கம் பாராட்டி மரியாதை செலுத்துவது தொன்று தொட்டு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..