பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கட்டாயம் வழங்க வேண்டும் தாய்ப்பால் வார விழாவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர்.வீர ராகவ ராவ் பேச்சு.

இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகளின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு நடந்த ஆரோக்கிய குழந்தை போட்டியில் தேர்வாை குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:
தமிழக அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் பச்சிளம் குழந்தைகள்,கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 1454 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்கள் செயல்பட்டு
வருகின்றன. இம்மையங்கள் மூலம் கருவுற்ற தாய்மார்களை கணக்கெடுத்தல், உடல் ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்து மருந்துகள், மாத்திரைகள் வழங்குதல், பச்சிளம் குழந்தைகளின் நலனை பாதுகாத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வார விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதன் அவசியத்தினை வலியுறுத்தும் விதமாக பல்வேறுவிழிப்புணர்வுநடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டன.ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியிலும் அதிகப்படியான வளர்ச்சியானது முதல் வருடத்தில் ஏற்படுகின்றது. இக்காலகட்டத்தில் குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்ப்பால் வழங்க வேண்டும். பிறந்த குழந்தைகளின் நல்வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பாலில் மட்டுமே இருக்கின்றன. குழந்தை பிறந்தவுடன் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் வழங்குவதன் மூலம் குழந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். தாய்ப்பால் வழங்குவது தாய்மார்களின் உடல் நலத்திற்கும் நன்மை பயக்கும்.பாரத பிரதமரின் சிறப்பு கவனம் செலுத்தக்கூடிய மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்று என்ற அடிப்படையில் பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை முக்கிய காரணியாகக் கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடு குறித்து கணக்கிடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் பச்சிளம் குழந்தைகள், கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் நலனுக்கான ஆரோக்கிய உணவு பழக்கவழக்கங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டார். உலக தாய்ப்பால் வார விழாவை யொட்டி நடந்த ஆரோக்கிய குழந்தைக்கான போட்டி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி
பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, சேதுபதி அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் க.மகுதம்மாள், ராமநாதபுரம் வட்டார மருத்துவ அலுவலர் மகேஷ்வரி, இயற்கை மருத்துவர் .ஷர்மிளா உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..